Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for global professionals · Thursday, March 28, 2024 · 699,421,895 Articles · 3+ Million Readers

Fr. Emmanuel is a Wrong Person -முதல் அமைச்சருக்கு மோசமான வேட்பாளர் அருட் தந்தை இம்மானுவேல்.

NEW YOTK, NEW YORK, USA, June 25, 2018 /EINPresswire.com/ -- Tamil Diaspora News: "Fr. Emmanuel needs to be in church, not in politics. Alongside Sumanthiran, he is one of the individuals who was debilitating the Tamils in the international community"

சிங்கள அரசாங்கத்தால் திட்டமிட்டு தமக்கு சார்பான ஒருவரை தமிழ் முதலமைச்சர் ஆக்கும் நோக்கிலேயே மங்கள சமர வீரவால் அருட் தந்தை இம்மானுவேலை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ய சுமந்திரனை கேட்டுக்கொண்டார்.

புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் பல ஆண்டுகளாக இந்த அருட் தந்தை இமானுவேல் அவர்களை அறிந்திருக்கிறோம். அவர் எப்போதும் பச்சோந்தி போன்று வண்ணங்களை மாற்றுவார். வென்றவர்களுக்கு கை தட்டுபவர்..

அவர் உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களை பேசி ஆயுதமேந்திய போராட்டத்தில் சேர தமிழ் இளைஞர்களை ஊக்குவித்தார். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் இறந்து போன பின்னரும் அந்த போர் தோல்விக்கு பின்னரும் , அருட் தந்தை இம்மானுவல் தனது பக்கத்தை மாற்றிக் கொண்டார் . தமிழ் பக்கத்திலிருந்து சிங்களப் பக்கத்திற்கு பாய்ந்தார் .

தமிழ் இளைஞர்களின் பெற்றோரிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

1990 களில் சந்திரிகா அரசாங்கம் பல கொலை, இன அழிப்பு, கிறிஸ்தவ கோவில்கள் மீது குண்டுவீச்சுக்கள், கிருசாந்தி உட்பட பெண்களை கற்பழித்து படுகொலை செய்தார்கள். அவருடைய ஆட்சியின் பல அழிவுகளை நாம் பட்டியலிடலாம். ஆனால் அருட் தந்தை சந்திரிக்காவிடம் இருந்து எந்த நிபந்தனையுமின்றி அல்லது மன்னிப்பு இல்லாமல் அருட் தந்தை இம்மானுவல், சந்திரிக்காவிடம் சரணடைந்தார்.

அவருக்கு உண்மையில் தான் ஒரு தமிழன் என்று நினைத்திருந்தால் அவமான பட்டுருப்பார். அவர் தமிழர்களின் சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

லண்டனில், திரு. சமரவீர அடிக்கடி உலக தமிழ் பேரவையை சந்திக்க செல்வார். உலக தமிழ் பேரவையின் தலைவர் அருட் தந்தை இம்மானுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் சந்திப்பில் ஒவ்வொரு நாளும் பாட்டி போட்டார்கள் .

தென் ஆபிரிக்க அரசாங்கம் இலங்கை கடற்கரைகளில் விலை உயர்ந்த ஹோட்டல் (Beach Side Resorts) கட்ட இலங்கையுடன் ஒப்பந்தம் பெற நிறைய பணம் செலவு செய்தது. இந்த செயற்பாட்டில், புலம்பெயர் தமிழர்களையும் இலங்கை அரசாங்கத்தையும் ஒற்றுமை படுத்த இலங்கை கேட்டுக்கொண்டதித்திற்கிணங்க இலங்கை அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். தென் ஆப்பிரிக்கா இலங்கைக்கும் உலக தமிழ் பேரவைக்கும் போலி சமரசம் தொடக்கியது. அருட்தந்தை இம்மானுவேலும் சுரேனும் பயணிக்க முதல் வகுப்புகளுக்கு டிக்கெட் கொடுத்தனர். இவர்கள் பல மாதங்களாக இதனை அனுபவித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஸ்ரீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாம் தமிழரிடம் கதைக்கிறோம் ஆகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஸ்ரீலங்கா மீதுள்ள போர் குற்றத்தை நீக்குமாறு கேட்டார்கள். ஆனால் மனித உரிமை குழுக்களும் மற்றைய புலம் பெயர் மக்களும் அழுத்தம் கொடுத்து போர் குற்றத்தை UNHRC யில் தொடந்தார்கள் .

அருட்தந்தை இம்மானுவேலும் சுரேனும் மேற்கொண்ட நடவடிக்கை தமிழர்களுக்கு மிகுந்த சேதத்தினை ஏற்படுத்தியது. தமிழர்களும் சிங்களவர்களும் தாமாக பிரச்சினைகள் தீர்க்க முடியும் என்றும், சர்வதேசத்தின் ஈடுபாடு தேவை இல்லை என்றும், இம்மானுவேலும் அவரின் கூட்டாலிகளும் (GTF, USTPAC and CTC ) உலகிற்கு ஒரு மாயை ஒளியை உருவாக்கினார்கள் .

அருட்தந்தை இம்மானுவேல் ஜெனீவாவில் சிங்களவர்களுடன் எப்போதும் இணைந்து திரிந்து கொண்டார். தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு மேற்கத்திய நாடுகளுக்கும் இது காட்டியது. இதனால் தமிழ் ஈழம் என்பததற்கு சாத்தியக்கூறுகளை குறைத்தன.

சிங்கப்பூரரில் சிங்கள மந்திரிகள் மற்றும் சிங்கள அறிவுஜீவிகளுடன் சுமந்திரன் இணைந்து சந்திக்க, சிங்கப்பூருக்கு அருட்தந்தை இம்மானுவேல் ஒரு இரகசிய பயணம் மேற்கொண்டார். அங்கு அருட்தந்தை இம்மானுவேல் "எக்க்கியியா ராஜ்ய" க்கு ஒப்புக் கொண்டார். புதிய அரசியலமைப்பிற்காக தமிழ் மொழியில் எந்தப் பெயரும் வேண்டாம் என்று ஒப்புக் கொண்டார. இவருடன் ஏனைய சுமந்திரன்னுடன் ஒத்தான USTPAC, GTF, CTC குழுக்களும் இருந்தன.

மேலும், அவரும் அவருடைய கூட்டாளிகளும் (USTPAC, GTF, CTC) அமெரிக்க அரசுத் துறையின் குறைந்த மட்ட அதிகாரிகளைச் சந்தித்தனர். இந்த பயண செலவுகள் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொட்டுக்கப்பட்து. இந்த சந்திப்பில் அருட்தந்தை இம்மானுவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜெனீவாவில் ஸ்ரீ லங்காவிற்கு இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்படி அமெரிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

அவர் ஒரு போதகர் , கடந்த தேர்தலில் சுமந்திரனை ஆதரிக்க தொலைக்காட்சி விளம்பரம் செய்தார்.

2010 இல், அவர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இருந்தார். தமிழ் காங்கிரஸை தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதத்திற்கு காரணமாக இருந்தவர்.

அவர் புலிகள் பயங்கரவாத அமைப்பு என ஆங்கில பத்திரிகை வெளியீடுகளை செய்தார். புலிகள் சொர்க்கநாடான இலங்கையை அழித்தவர்கள் என்றும் ஆங்கில பத்திரிகை வெளியீடுகளில் கூறியிருந்தார்.அவர் தனது புதிய ஆண்டு செய்திகளில் இந்த வகையான செய்திகளை வெளியிட்டார்.

யாருமே இந்த வடக்கில் அருட் தந்தை இம்மானுவல் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் சிங்ளவர்களின் அடிவருடிகளாக தான் இருப்பார்கள்.

சிங்கள அரசாங்கத்தால் திட்டமிட்டு தமக்கு சார்பான ஒருவரை தமிழ் முதலமைச்சர் ஆக்கும் நோக்கிலேயே மங்கள சமர வீரவால் அவரது சிநேகிதர் அருட் தந்தை இம்மானுவேலை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ய சுமந்திரனை கேட்டுக்கொண்டார். உடனே சுமந்திரன் பத்திரிகைகளுக்கு இந்த செய்தியை கசிய விட் டார். இது சுமந்திரன் செய்வதும் பேசுவதும் சிங்கள அரசாங்கத்தின் சொல்லையும் செயலையும் காட்டுகிறது.

அவரது கூட்டாளிகள் சிங்களவர்கள். எல்லா தமிழர்களும் அவரை "துரோகி" என்று சொல்வதாய் காணொளி ஒன்றில் கூறியிருந்தார். ஜெர்மனியில் உள்ள தமிழர்கள் தொடர்ந்தும் துரோகி என்றதால் ஜெர்மனியை விட்டு வெளியேறினார். அவர் தற்போது ஸ்ரீலங்காவில் உள்ளார். தமிழ் புலம்பெயர்ந்தோர் பெரும்பான்மையினர் அவரை பல விதமான பட்ட பெயருடன் அழைத்தனர். புலம்பெயர்ந்தோர் பட்ட பெயர் அழைப்புகள் பற்றி தமிழ் ஊடகங்களுக்கு அவர் புகார் கூறுகிறார்.

இவர் தேவாலயத்தில் இருக்க வேண்டியவர் . சுமந்திரனுடன் சேர்ந்து சர்வதேச சமூகத்தில் தமிழர்களை பலவீனபடித்தியவர்களில் அருட்தந்தை இம்மானுவே லும் ஒருவராக இருக்கின்றார்

Editor
Tamil Diaspora News
914 713 4440
email us here

Powered by EIN Presswire


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.

Submit your press release